இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் உணவுபொருள்கள் எவை தெரியுமா…
இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் உணவுபொருள்கள் எவை தெரியுமா…!
பொதுவாக உடலில் கைகள், பாதம், விரல்கள், கால்கள் போன்ற பாகங்களுக்கு இரத்த ஓட்டம் சீராக இல்லாவிட்டால் தான் இந்த பிரச்சனை ஏற்படும். மேலும் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லையெனில், சிறுநீரக பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம், வீங்கி பருத்து வலிக்கிற நரம்பு போன்ற தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தும் இஞ்சி, பல்வேறு பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தாக செயல்படுகிறது. இதற்கு இஞ்சியில் உள்ள ஜிஞ்சரோன் மற்றும் ஜிஞ்சரால் என்னும் பொருட்கள் தான் காரணம். இவை இரத்தம் உறைதலைத் தடுத்து, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
பல்வேறு உணவுகளில் சேர்க்கப்படும் பூண்டு, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும் பூண்டு இரத்த நாளங்களை அமைதிப்படுத்தி, இரத்த சிவப்பணுக்களுடன் சேர்ந்து ஹைட்ரஜன் சல்பைட்டின் உற்பத்தியை அதிகரிக்கும். ஏனெனில் ஹைட்ரஜன் சல்பைடு தான் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
வெங்காயம் கூட இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதற்கு அதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் தான் காரணம். எனவே முடிந்த அளவில் இதனை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டுமெனில் தினமும் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வாருங்கள். ஏனெனில் அதில் உள்ள எபிகேலோகேட்டசின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட், செல்களின் ஆரோக்கியத்தை அதிகரித்து, இரத்த நாளங்களை விரிவடைய செய்து, இரத்த ஓட்டத்தை தடையின்றி உடல் முழுவதும் பாய உதவுகிறது.
பெரும்பாலான உணவுப் பொருட்களில் காரத்திற்கும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் மிளகு உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதிலும் இதனை அன்றாடம் ஏதேனும் ஒரு உணவுப்பொருளுடன் சேர்த்து சாப்பிட்டால், இரத்த நாளங்கள் விரிவடைந்து, இரத்த ஓட்டம் உடல் முழுவதும் சீராக பாயும்.
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க, லைகோபைன் நிறைந்த தக்காளியை உணவில் அன்றாடம் சேர்த்து வர வேண்டும். ஏனெனில் இதில் உள்ள லைகோபைன் பிளேக் கட்டமைப்பை உடைத்து, இரத்த ஓட்டத்தை உடலில் சீராக்குகிறது
– அனைவருக்கும் பகிருங்கள்