கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற குழப்ப நிலையின் போது, தன்னால் மிளகாய்த் தூள் கலக்கப்பட்ட நீர் வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யென நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.
மிளகாய்த் தூள் தெரிந்தவர்களுக்கு கத்தி தெரியவில்லையா எனக் கேள்வி எழுப்பிய பிரசன்ன ரணவீர, மேலே பார்வையாளர் பகுதியிலிருந்து வீசப்பட்ட போத்தல் தனக்கு கிடைத்ததாகவும், அதிலிருப்பது என்னவென்று தெரியாமலேயே தான் அதனை வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.